தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. சமீபத்தில் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை 2’ திரைப்படம் அவரின் நடிப்பில் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர், அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், புதுச்சேரியில் விஜய் சேதுபதி தற்காப்புக் கலை கற்றுக் கொண்டுள்ளார். கர்லா கட்டை சுற்றுதல் மற்றும் தற்காப்பு கலையை பயிலும் வீடியோக்கள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது இந்த புதிய திறமையை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்று வருகின்றனர்.