நடிகர் விஜய்யின் ‘தளபதி 69’ படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் 5ம் தேதி பூஜையுடன் துவங்கியது. படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்டில், பாடல் காட்சியுடன் துவங்கியது. தற்போது, பாடல் காட்சியின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இணைந்துள்ளார்.

முன்னதாக, விஜய் மற்றும் அனிருத் கூட்டணியில் வந்த படங்கள் மாபெரும் வெற்றியடைந்தன. ‘தளபதி 69’ விஜய்யின் இறுதி படம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்படத்தின் இசையும் பாடல்களும் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

இப்படத்தை இயக்குனர் ஹெச். வினோத் இயக்குகிறார், அவர் தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை, துணிவு, நேர்கொண்ட பார்வை போன்ற படங்களை இயக்கியவர். இக்கதையில் காவல்துறை மையமாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது. விஜய் இதில் முன்னாள் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். அரசியல் சுவை கலந்த இப்படம், அடுத்த ஆண்டு அக்டோபரில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.