ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களையும் தனித்தனியாக ரீ ரிலீஸ் செய்வதற்கு பதிலாக இரண்டையும் சேர்த்து ஒரே பாகமாக ரிலீஸ் செய்ய படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இதுகுறித்த அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் சேர்த்து ஒரே படமாக “பாகுபலி தி எபிக்” என்ற பெயரில் வருகிற அக்டோபர் மாதம் 31ந் தேதி திரையரங்குளில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
