Friday, October 11, 2024

த்ரிஷாவா இது செம்ம கியூட்டா இருக்காங்களே… குட் பேட் அக்லி படத்தில் த்ரிஷாவின் லுக் பிக் வைரல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘மார்க் ஆண்டணி’ மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. அப்படத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தனர்.இந்த வெற்றியின் பின்னர், ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது அஜித் நடித்துவரும் “குட் பேட் அக்லி” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் அஜித் மூன்று வேடங்களில் நடித்துள்ளார், மேலும் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். அவர்களுடன் சுனில் மற்றும் நஸ்லேன் போன்ற பலரும் நடித்து வருகின்றனர்.

திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் சில நாட்கள் நடைபெற்றன. இதன் பின் படப்பிடிப்பு பணிகள் ஸ்பெயினில் நடைபெற உள்ளது. நடிகர் பிரசன்னா இந்த படத்தில் முக்கியமான ஒரு பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், “குட் பேட் அக்லி” படத்தில் அஜித்தின் புதிய தோற்றமுடைய புகைப்படங்களை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் வெளியிட்டிருந்தார்‌. இந்நிலையில் இப்படத்தில் திரிஷா நடித்துள்ள தோற்றத்தின் புகைப்படமும் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புதிய தோற்றம் இதுவரை காணாத விதமாக உருவாகி, தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால், ரசிகர்களிடம் படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

- Advertisement -

Read more

Local News