Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

விலகிய திரிப்தி டிம்ரி… பாலிவுட்டில் என்ட்ரி ஆகிறாரா பிரபாஸ் பட கதாநாயகி இமான்வி?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பான் இந்தியா நட்சத்திரங்களுள் ஒருவரான பிரபாஸ் தற்போது பல முக்கிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் ஒன்று, ஹனு ராகவபுடி இயக்கும் பௌஜி. இந்த படத்தில் சமூக வலைத்தள பிரபலம் இமான்வி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இது அவரது முதல் தெலுங்கு திரைப்படமாகும்.

அதே நேரத்தில், இமான்வி விரைவில் பாலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. டி-சீரிஸ் நிறுவனர் பூஷன் குமார் சமீபத்தில் கார்த்திக் ஆர்யன் நடித்த ஆஷிகி 3 படத்தை அறிவித்தார். இதில் முதலில் திரிப்தி டிம்ரி கதாநாயகியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

ஆனால் தற்போது பரவி வரும் தகவல்களின் படி, திரிப்தி டிம்ரி இப்படத்திலிருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இமான்வியை கதாநாயகியாக நடிக்க தயாரிப்பாளர்கள் பரிசீலித்து வருவதாக தெரிகிறது. இமான்வி இந்த படத்தில் நடித்தால், அது அவரது சினிமா பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக இருக்கும்.

- Advertisement -

Read more

Local News