Friday, December 20, 2024

விவசாய வாழ்வியலை சொல்லவரும் ‘டிராக்டர்’ திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரைப்படங்களை வெளிநாடுகளில் வெளியிடும் பிரைடே என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘டிராக்டர்’. இந்த திரைப்படத்தை இயக்கியவர் ரமேஷ் யந்த்ரா, அவர் இதற்கு முன்பு “குடியம் குகைகள்” மற்றும் “இந்திய தொல்பழங்காலத்தின் தந்தை” போன்ற ஆவணப்படங்கள் மூலம் பிரபலமாகியவர். இது அவரது முதல் முழுநீள திரைப்படமாகும்.

படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் புதுமுகங்கள். நாயகனாக பிரபாகரன் ஜெயராமன், நாயகியாக ஸ்வீதா பிரதாப், பிள்ளையார்பட்டி ஜெயலட்சுமி மற்றும் சிறுவனாக கோவர்தன் நடித்துள்ளனர். மேலும், கவுதம் முத்துசாமி ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

படத்தைப் பற்றி இயக்குநர் ரமேஷ் யந்த்ரா கூறியதாவது: நமது விவசாயிகளின் கல்வியறிவு குறைந்ததைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற முயற்சிக்கும் மோசடிகளை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய விவசாய முறைகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் அழிக்கும் விதத்தை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதே படத்தின் நோக்கம். டிராக்டர் படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அது விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது,” என்றார்.

- Advertisement -

Read more

Local News