தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகராக திகழும் பிரபாஸ், ‘பாகுபலி’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு பான் இந்தியா நடிகராகப் உயர்ந்தார். தொடர்ந்து அவர் நடித்த ‘ராதே ஷ்யாம்’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ போன்ற பான் இந்திய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். தற்போது பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘தி ராஜா சாப்’. இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, ‘சீதா ராமம்’ திரைப்படத்தை இயக்கிய ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் மற்றொரு படம் உருவாகி வருகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ரவி ஷங்கர் இணைந்து இந்தப் பிரமாண்டமான படத்தைத் தயாரிக்கின்றனர். சமூக ஊடகங்களில் பிரபலமான இமான்வி இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கான இசையை விஷால் சந்திரசேகர் அமைக்கிறார்.
பிரபாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்படத்திற்கு ‘பௌஜி’ என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

