Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

மே1ல் வெளியாகும் மூன்று பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள்… ரேஸில் முந்தபோவது யார்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மே 1ஆம் தேதி நாளை தமிழில் ‘ரெட்ரோ’, தெலுங்கில் ‘ஹிட் 3’, ஹிந்தியில் ‘ரெய்டு 2’ ஆகிய படங்கள் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படங்களாக இருக்கின்றன. இந்த மூன்று படங்களில் எந்த படம் அதிக வசூலை அடையும், விமர்சன ரீதியாக சிறந்த வரவேற்பைப் பெறும் என்பதை திரையுலகத்தினரும் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

ஆன்லைன் முன்பதிவின் நிலவரத்தைப் பார்க்கும்போது, மேலே குறிப்பிடப்பட்ட மூன்று வெவ்வேறு மொழிப் படங்களில் தெலுங்குப் படமான ‘ஹிட் 3’ முதலிடத்தில் இருப்பதாக தெரிய வருகிறது. தற்போது நிலவும் தரவின்படி, ஒரு குறிப்பிட்ட ஆன்லைன் முன்பதிவு தளத்தில் கடந்த ஒரு மணி நேரத்துக்குள் மட்டும் இந்த படத்திற்காக சுமார் 12 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதற்கு பிறகு, தமிழ்ப் படமான ‘ரெட்ரோ’ படத்திற்கு கடந்த ஒரு மணி நேரத்தில் சுமார் 6 ஆயிரம் முன்பதிவுகளும், ஹிந்திப் படமான ‘ரெய்டு 2’ படத்திற்கு 3 ஆயிரத்திற்கு சிறிது அதிகமான முன்பதிவுகளும் நடைபெற்றுள்ளன.

- Advertisement -

Read more

Local News