சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடர் 9.59 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.தொடங்கி சில வாரங்களேயான மூன்று முடிச்சு தொடர் 8.35 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.முதல் இரு இடங்களை பிடித்துவந்த சிங்கப் பெண்ணே தொடர் 8.26 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று, மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மருமகள் தொடர் இந்த வாரம் 7.98 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது.சுந்தரி தொடர்7.85 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடர், இந்த வாரம் 7.76 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று ஆறாம் இடத்தில் உள்ளது.சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களே முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
