மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா, அபிராமி உள்ளிட்டோர் நடித்திருக்கும் தக் லைப் திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாகிறது. இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தில் பல முக்கியமான காட்சிகள் உள்ளன, இதில் கமல் மற்றும் அபிராமி இடையே இடம்பெறும் முத்தக்காட்சி அதிகம் பேசப்பட்டு வருகிறது.இப்படி ஒரு காட்சி தேவையா என்று சமூக ஊடகங்களில் சிலர் விமர்சனம் செய்தனர். இந்த விமர்சனங்களுக்கு நடிகை அபிராமி ஒரு பேட்டியில் பதிலளித்துள்ளார்.
அதில், அந்த காட்சியை முழுப் படத்தோடும் பார்க்கும்போது அதன் முக்கியத்துவம் புரியும். நீங்கள் நினைப்பது போல் அது சாதாரண முத்தக்காட்சி அல்ல. வெறும் சில வினாடிகள் மட்டுமே அந்தக் காட்சி இடம் பெறுகிறது. ஆனால், டிரெய்லரில் இடம்பெற்றதால் அது வைரலானது. இந்தக் காட்சிக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டியதில்லை. மற்ற நடிகர்களும் முத்தக்காட்சிகளில் நடித்துள்ளனர் அல்லவா? ஆனால், ஒரு பிரபல நடிகர் நடித்ததால்தான் இதுபோன்ற விமர்சனங்கள் எழுகின்றன. இப்போது இது போன்ற காட்சிகள் சாதாரணமாகி விட்டன என்று தெரிவித்துள்ளார். விருமாண்டி படத்திற்கு பிறகு, அபிராமி மீண்டும் இப்படத்தில் கமலுடன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.