மலையாள இளம் நடிகரான நீரஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில், ஜவான் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் அது அவ்வளவு பெரிய முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் அல்ல. அது மட்டுமல்ல அந்த சமயத்தில் எனக்கு மற்ற மொழி படங்களில் நடிப்பதற்கான ஆர்வம் கொஞ்சம் கூட இல்லாமல் இருந்தது. அதனால் அந்த வாய்ப்பை மறுத்து விட்டேன். ஷாருக்கான் பக்கத்தில் நிற்கும் வாய்ப்பு கிடைத்தாலே போதும், நீ அவரது படத்தையே மறுத்து விட்டாயே என்று கூறி எனது நண்பர்களும் நலம் விரும்பிகளும் கூட என்னை திட்டினார்கள். ஆனால் பெரிதான எது ஒன்றையும் நான் இழந்ததாக நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார் நீரஜ் மாதவ்.
