தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார் நடிகை சமந்தா. தற்போது, தெலுங்கில் சுபம் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் மே 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தைப் பற்றிக் கூறிய சமந்தா, “இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் தொலைக்காட்சி தொடர்களால் ஈர்க்கப்படுகிறார்கள். அவர்களை முன்னிட்டு சுபம் என்ற இந்த படத்தை திகிலும் நகைச்சுவையும் கலந்த கதையில் உருவாக்கியுள்ளோம். இதை ஒரு சமூக நையாண்டி திரைப்படமாகவும் கூறலாம்.
நான் ஒரு சிறந்த தயாரிப்பாளராக இல்லாவிட்டாலும், இந்தக் கதையின் மீது எனக்கு இருந்த நம்பிக்கையால் இந்த படத்தை தயாரிக்க முடிவெடுத்தேன். இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிச்சயமாக பூர்த்தி செய்யும் என நம்புகிறேன். தயாரிப்புக்காக யாரிடமும் உதவி கோராமல், அனைத்து செலவுகளையும் நானே கவனித்துள்ளேன். இந்தப்படத்திற்கு பிறகு, ஜூன் மாதம் முதல் ‘மா இண்டி பங்காரம்’ என்ற புதிய படத்தில் நடிக்க இருக்கிறேன். அதையும் தயாரித்து நடிக்க திட்டமிட்டுள்ளேன்” என கூறியுள்ளார்.