அசாம் மாநிலம் தேஜ்பூரைச் சேர்ந்தவர் கயாடு லோஹர். இவர் 2021-ஆம் ஆண்டு மனோரஞ்சன் நடித்த “முகில்பேட்டை” என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர், 2022-ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ விஷ்ணு நடித்த “அல்லூரி” திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் தனது பிரவேசத்தை பதிவு செய்தார்.

கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி, பிரதீப் ரங்கநாதன் நடித்த, அஸ்வத் மாரிமுத்து இயக்கிய “டிராகன்” திரைப்படம் வெளியானது. இந்த படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கயாடு லோஹர், தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் நடிகையாக மாறியுள்ளார்.

தற்போது, “இதயம் முரளி” திரைப்படத்தில் அதர்வா உடன் நடித்து வருகிறார். அடுத்து, அவர் ஒரு தெலுங்கு திரைப்படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில், நடிகை கயாடு லோஹர், தனது புத்துணர்ச்சிக்கான காரணத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், அதிகாலை எழுந்தவுடன் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் யோகா செய்வதாகவும், அரைமணி நேரம் ஸ்ட்ரெச்சிங் பயிற்சி, மேலும் ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்வதாகவும் தெரிவித்தார்.