பா.ரஞ்சித்தின் உதவியாளர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கும் படம் ‘சொர்க்கவாசல்’. இதில் ஆர்ஜே பாலாஜி, இயக்குநர் செல்வராகவன், பாலாஜி சக்திவேல், நட்டி, கருணாஸ், ஷோபா சக்தி, அனிருத்தின் தந்தை ரவி ராகவேந்திரா, மலையாள நடிகர் ஷரத் உதீன், ஹக்கீம் ஷா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மலையாள நடிகை சானியா ஐயப்பன் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு மம்மூட்டியின் ‘பிரமயுகம்’ படத்திற்கான இசையமைப்பாளர் கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார்.
இயக்குனர் சித்தார்த் கூறியதாவது, “இது முழுக்க ஜெயில் வாழ்க்கையைப் பற்றிய கதைதான். ஜெயிலுக்கு எதிரான பார்வையை நாம் கொண்டிருக்கிறோம். ஆனால் ஜெயில் என்பது ஆங்கிலேயர்கள் உருவாக்கிய சட்டங்களின் விளைவாக அமைந்தது. அங்கு குற்றம் செய்தவர்களும், குற்றமின்றி கைதானவர்களும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வாழ்க்கை அனுபவங்களையும், தங்களின் கதையையும் இணைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளேன்.
ஜெயில் வாழ்க்கை பற்றி ‘வடசென்னை’, ‘விருமாண்டி’ போன்ற படங்களில் பேசப்பட்டுள்ளது. ஆனால் அந்த படங்களில் சொல்லப்படாத சில புதிய விஷயங்களை இந்தப் படம் சொல்கிறது. சிறை காவலர்கள் கூட தங்கள் வாழ்க்கை சுதந்திரமாக இல்லாமல் அங்கிருந்து வெளியேற முயற்சிக்கின்றனர் என்பதையும் இது பேசுகிறது.ஆர்ஜே பாலாஜி இந்த கதாபாத்திரத்தில் ஏன் நடிக்கக்கூடாது முன்பு நினைத்தேன். ஆனால் கதையை கேட்டவுடன், அவர் அந்த கேரக்டராகவே மாறிவிட்டார். இந்த படத்தில் அவர் முந்தைய படங்களைவிட மிக வேறுபட்ட விதமாக தோன்றுவார்,” என்றார்.