Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

மாமன் படத்தில் எனக்கு மிகுந்த எமோஷனை ஏற்படுத்திய வசனம் இதுதான்- நடிகர் சூரி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘விலங்கு’ என்ற வெப் சீரிஸை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கும் புதிய திரைப்படம் ‘மாமன்’. இப்படம் குறித்து நடிகர் சூரி தெரிவித்ததாவது, இந்த படத்தில் ராஜ்கிரண் நடித்தது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. மேலும், கதைக்காக எந்தவொரு சம்பளமும் வேண்டாம் என்று கூறிய பாடலாசிரியர் விவேக்கிற்கு நன்றியை தெரிவிக்கிறேன்.

‘சீமராஜா’ படத்தின் போது இயக்குனர் பொன்ராம் என்னை சிக்ஸ் பேக் வைத்துக்கொள் என்று கூறினார். அதற்காக நான் ஆறு மாதங்கள் கடுமையாக உழைத்தேன். என் மனைவியும் எனக்கு உறுதுணையாக இருந்தார். அந்த படம் திரையில் வெளியானபோது, குடும்பத்துடன் விருப்பமுடன் சென்று பார்த்தேன். ஆனால், அந்த சிக்ஸ் பேக் காட்சி வெறும் 59 விநாடிகள் மட்டுமே திரையில் வந்தது.அந்த அனுபவம் ஏமாற்றமாக இருந்தாலும், அது தான் எனக்குள் உயர்ந்த நம்பிக்கையை விதைத்தது. அந்த சந்தர்ப்பம் இல்லாமல் இருந்திருந்தால், இன்று எனக்கு எனது மேல் இருக்கும் நம்பிக்கை ஏற்பட்டிருக்காது. இயக்குநர் பொன்ராமுக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன்.

இந்தப் படத்தின் கதையை நான் எழுதியிருந்தாலும், எனது பெயர் சேர்க்க வேண்டாம் என இயக்குனரிடம் கூறியிருந்தேன். ஆனால், இப்படத்தில் கதைக்காக எனது பெயர் இடம் பெற்றிருக்கிறது.நான் இன்று இங்கு நிற்கிறேன் என்றால், அதற்கான காரணம் என் குடும்பமே. இப்படத்தில் உள்ள ‘சாமிக்கு அடுத்து பொண்டாட்டி இல்லடா… பொண்டாட்டிதான் சாமி’ என்ற வசனம் எனக்கு மிகுந்த உணர்வை ஏற்படுத்தியது. அதுபோல, எனக்கும் சாமிக்கு அடுத்து குடும்பமே எல்லாம் என்று நான் நம்புகிறேன்.

இன்றைய நாளில் எனக்கு பல விஷயங்களை கற்றுத்தந்தது என் குடும்பமே. இப்படத்தின் கதை உருவான இடமும் அதுவே. இந்தக் கதையை தனியாக யோசித்து எழுதியதல்ல; நம் குடும்ப உறவுகளில் நடந்த நிகழ்வுகளையே பதிவு செய்துள்ளேன்.தாய் மாமன்கள் குறித்துப் பல திரைப்படங்கள் வந்துள்ளன. ஆனால், இதில் ஒரு சிறுவனும் அவனுடைய தாய்மாமனும் இடையே உள்ள உறவைத் திரையிலாகியிருக்கிறோம். மாஸ்டர் பிரகீத் சிவன் இப்படத்தில் மருமகனாக நடித்துள்ளார். அவர் இந்தப்பட இயக்குநரின் மகனாவார்’ என்று கூறினார் சூரி.

- Advertisement -

Read more

Local News