நடிகை சமந்தா, சினிமா உலகிற்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். 2010ஆம் ஆண்டு திரைக்கு வந்த ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், அதே ஆண்டில் வெளியான ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர், மாஸ்கோவின் காவிரி, நடுநிசி நாய்கள், நீதானே என் பொன் வசந்தம், தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில், தமிழ் சினிமாவில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்தார். இந்த படத்திற்குப் பிறகு, தமிழில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, ‘சாகுந்தலம்’ மற்றும் ‘குஷி’ ஆகிய தெலுங்கு படங்களில் நடித்தார். ஆனால், இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவு வசூலையும், பாராட்டுகளையும் பெறவில்லை.இந்த நேரத்தில், அப்பாவின் மறைவு, மேலும் மயோசிடிஸ் என்ற நேர்க்கோல் நோய் காரணமாக சிகிச்சை பெற்ற அவர், தற்போது உடல்நிலையை சீர்செய்து மீண்டு வந்துள்ளார். இந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் திரையுலகில் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார். இதற்கு முன்பு, பாலிவுட் வெப் சீரிஸ்களில் நடித்திருந்தார்.
நடிகர் நாகசைதன்யாவுடன் காதலில் இருந்து, திருமணம் செய்து கொண்ட அவர், பின்னர் கருத்து வேறுபாட்டால் பிரிந்தார். தெலுங்கு திரையுலகில் ‘மா இண்டி பங்காரம்’ படத்தின் மூலம் திரும்ப உள்ள சமந்தா, இந்தப் படத்தில் நடிப்பதுடன், தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். இதற்கிடையில், சினிமாவில் தனது 15 வருட பயணத்தை இன்ஸ்டாகிராமில் கொண்டாடியுள்ளார்.அந்த பதிவில் “இந்த 15 ஆண்டுகள் மிக அருமையான அனுபவமாக இருந்தது. நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். இந்த பயணத்தில் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. நன்றி சென்னை!” என்று குறிப்பிட்டுள்ளார்.