தெலுங்கு நடிகரும், முன்னாள் அரசியல்வாதியும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிரஞ்சீவிக்கு, மார்ச் 19ஆம் தேதி, ‘யுனைட்டெட் கிங்டம்’ பார்லிமென்டில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. சமுதாயத்திற்காக அவர் செய்த சிறப்பான பணியை பாராட்டும் விதமாக, இந்த விருது அவருக்கு வழங்கப்பட இருக்கிறது. பார்லிமென்ட் உறுப்பினர்களால் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ‘பிரிட்ஜ் இந்தியா’ அமைப்பும், சிரஞ்சீவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி அவரை கௌரவிக்க உள்ளது. இந்த விருது, சினிமாவுக்காக மட்டுமல்லாமல், பொது சேவைக்கும், கலாச்சார தலைமைத்துவத்திற்கும் வழங்கப்படுகிறது.
சமீபத்தில், சிரஞ்சீவிக்கு யுகே குடியுரிமை மரியாதை நிமித்தமாக வழங்கப்பட்டதாக சில செய்திகள் வெளிவந்தன. ஆனால், இதை அவரது குழுவினர் மறுத்து, எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படாமல் வெளியிடக் கூடாது என அறிவுறுத்தினர். இந்நிலையில், தற்போது சிரஞ்சீவிக்கு பாராட்டு விழாவும், விருது வழங்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது.