2012ஆம் ஆண்டு வெளியான பிரபுசாலமன் இயக்கிய ‘கும்கி’ திரைப்படம், விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்ததுடன் விமர்சனத்திலும் வசூலிலும் வெற்றி பெற்றது. அந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சுகுமாருக்கும் பெரிய வரவேற்பு கிடைத்தது. பின்னர் அவர் பல பிரபல படங்களில் பணியாற்றினார்.
இப்போது பிரபு சாலமன் – சுகுமார் கூட்டணி மீண்டும் இணைந்து ‘கும்கி 2’ படத்தை உருவாக்கியுள்ளது.
இந்தப் படம் முழுவதும் காட்டுப் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் கதாநாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார். வில்லனாக ஹரிஷ் பெராடி நடிக்கிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
சமீபத்தில் “பொத்தி பொத்தி உன்னை வச்சி” பாடல் வெளியானது. தற்போது ‘கும்கி 2’ படத்தின் டிரெய்லர் வெளியாகி, ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. இப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

