Touring Talkies
100% Cinema

Thursday, December 11, 2025

Touring Talkies

தனுஷின் டி54 படக்குழு ரசிகர்களுக்கு வைத்த முக்கிய வேண்டுகோள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

போர் தொழில்” படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா தற்போது தனுஷ் நடிக்கும் 54-வது படத்தை இயக்குகிறார். இப்போதைக்கு ‘டி54’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் தனுஷ்க்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்திலிருந்து சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்ததால் தயாரிப்பு குழு ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் அன்பான ரசிகர்களே, ‘டி54’ படப்பிடிப்பு தளத்திலிருந்து எவ்வித காட்சிகளையும் பகிராமல் எங்களுக்குத் துணை நிற்குமாறு கேட்டுக் கொள்கிறோம். உங்கள் ஒத்துழைப்பு அவசியம்,” என தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார்.

- Advertisement -

Read more

Local News