Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

தசரா காம்போவில் உருவாகும் படத்தின் டைட்டில் வெளியீடு… பிரம்மாண்டமாக உருவாகிறது ‘தி பாரடைஸ்’ !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கில் முன்னணி நடிகராக விளங்குபவர் நானி. வித்தியாசமான கதைகளைக் கவனமாகத் தேர்வு செய்து நடிப்பதில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ ஆகிய படங்கள் அவருக்கு மிகுந்த வெற்றியைப் பெற்றன. அதன் பின்னர் வெளியான ‘தசரா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அதைத் தொடர்ந்து நானியின் 30வது படமாக ‘ஹாய் நான்னா’ வெளியானது. இதில் நானியுடன் மிருணால் தாக்கூர் நடித்தார். 31வது படமாக ‘அடடே சுந்தரா’ படத்தின் இயக்குனருடன் நானி மீண்டும் இணைந்தார். டிவிவி என்டர்டெயின்மென்ட் தயாரித்த ‘சரிபோத சனிவாரம்’ ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியாகியது. இதில் எஸ்.ஜே. சூர்யா, பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ரூ.100 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இயக்குனர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் ‘ஹிட் 3’ படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நானியின் 33வது படத்திற்கான அறிவிப்பு வெளியாகியது. ‘தசரா’ படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஒடேலா இந்தப் படத்தையும் இயக்குகிறார். இதற்கு தற்காலிகமாக ‘நானி ஒடேலா -2’ என்று பெயரிடப்பட்டது; தற்போது ‘தி பாரடைஸ்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தை எஸ்எல்வி சினிமாஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். நானியின் ‘ஜெர்ஸி’ மற்றும் ‘கேங்ஸ்டர்’ படங்களுக்கு அனிருத் இசையமைத்திருந்தார். நானியின் படங்களில் மிகுந்த பொருட்செலவில் உருவாகும் படமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News