Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

கடைசி வரை கிடைக்காத வேட்டையன் படத்திற்கான தெலுங்கு டைட்டில்‌… நடிகர் ராணா டகுபதி சொன்ன விஷயம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஜினிகாந்த் நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்ற ‘வேட்டையன்’ திரைப்படம் நேற்று (அக்-10) வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பல மொழித் திரையுலகை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். குறிப்பாக நடிகர் ராணா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் வலம் வந்து, பவர்ஃபுல் வில்லனாக பிரமிக்க வைக்கும் வகையில் நடித்துள்ளார்.

தெலுங்கில் ‘வேட்டகாடு’ என்ற பெயரில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தாலும், கடைசிவரை அந்த தலைப்பை பெற முடியாததால், ‘வேட்டையன்’ என்ற தமிழ்ப் பெயரிலேயே அந்த மண் அதிரடியாக வெளியானது. இதனால், தெலுங்கு ரசிகர்களிடையே சிறு அதிருப்தி ஏற்பட்டதாக செய்திகள் பரவின.

இந்த சூழலில், நடிகர் ராணா மற்றும் தெலுங்கில் இப்படத்தை விநியோகம் செய்த அவரது தந்தை சுரேஷ் பாபு பத்திரிக்கையாளர்களிடம் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது ராணா, சமீபத்தில் வெளியான ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’ திரைப்படம் கூட தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் ஒரே பெயரிலேயே வெளியானது. இன்றைய ரசிகர்கள் டைட்டிலைவிட கதையையும், அதில் யார் நடிக்கிறார்கள் என்பதையும் முக்கியமாக பார்க்கிறார்கள். வேட்டையன் படத்திற்கு தெலுங்கில் பொருத்தமான தலைப்பைப் பெற முடியாத சூழ்நிலையில், அதே தமிழ்ப் பெயரிலேயே வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அதேபோல, விநியோகஸ்தர் சுரேஷ் பாபு கூறும்போது, “ஹாலிவுட்டில் வெளியாகும் ‘அவதார்’, ‘டைட்டானிக்’ போன்ற படங்களை அதே பெயரிலேயே நம்மிடம் எல்லோரும் ரசிக்கிறார்கள். ஆனால் நம்முடைய பிராந்திய மொழிகளில் மட்டும் தலைப்பு தொடர்பான பிரச்சினைகள் எழுகின்றன” என்று தனது கருத்தைப் பகிர்ந்தார்.

- Advertisement -

Read more

Local News