“உமா மஹேஷ்வர உக்ரா” என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார் ரூபா கொடுவாயுர்.அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ரூபா தமிழ் சினிமாவிலும் தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.
அவர் நடித்துள்ள புதிய தமிழ் படத்திற்கு “எமகாதகி” என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் ஒரு அமானுஷ்ய சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கியுள்ளார், மற்றும் சரங் பிரதார்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. ரூபாவுடன், யூடியூப் பிரபலம் நரேந்திர பிரசாத், ஹரிதா, கீதா கைலாசம், சுபாஷ் ராமசாமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின் இசை உரிமையை சரிகமா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.