தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயன், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்துள்ளார்.இந்தப் படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மதராஸி வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், படக்குழு தீவிரமான ப்ரோமோஷனில் ஈடுப்பட்டு வருகிறது.
மேலும், இந்த வாரத்தில் மதராஸி படத்தின் முக்கிய அப்டேட்கள் வெளியாகும் என படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அப்டேட்கள் டிரெய்லர் அல்லது இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது.