நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இயக்குனர் சுந்தர் சி மற்றும் பிரபல காமெடி நடிகர் வடிவேலு, “கேங்கர்ஸ்” படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.சுந்தர் சி – வடிவேலு கூட்டணி கோலிவுட்டில் மிகப்பெரிய வெற்றிகரமான கூட்டணியாக கருதப்பட்டது. ஆனால், சில கருத்து வேறுபாடுகள் காரணமாக, பல ஆண்டுகளாக இருவரும் இணைந்து பணியாற்றாமல் இருந்தனர்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த பிரபல காமெடி கூட்டணி மீண்டும் இணைவதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர். இந்தப் படத்தில் வடிவேலு, “கைப்புள்ள” மற்றும் “வீரபாகு” போன்ற கதாபாத்திரங்களின் பாணியில் “சிங்காரம்” என்ற வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், “கேங்கர்ஸ்” படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு இன்று அறிவிக்கவுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சமீபத்தில், சுந்தர் சி இயக்கத்தில் வெளியான “மதகஜராஜா” திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.