தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகரான கவின், லிப்ட் மற்றும் டாடா போன்ற படங்களின் மூலம் வெற்றி கண்டார். ஆனால் அண்மையில் வெளியான அவரின் பிளடி பெக்கர் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிப்பெறவில்லை. தற்போது டான்ஸ் மாஸ்டர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கியுள்ள கிஸ் என்ற படத்தில் நடித்துள்ளார் கவின். இதில் அவருக்கு ஜோடியாக அயோத்தி புகழ் ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார்.

இப்படம் காதல் கதையை மையமாகக் கொண்டு இளைஞர்களை கவரும் விதமாக உருவாகியுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது ரிலீஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக வெளியான பிளடி பெக்கர் படம் பெரிதாக வரவேற்பைப் பெறாத நிலையில் கவின் நடித்துள்ள இந்த கிஸ் திரைப்படம் அவருக்கு நிச்சயம் கம்பேக்காக அமையும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.