பவன் கல்யாண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘ஹரி ஹர வீர மல்லு’. இந்தப் படத்தை ஜோதி கிருஷ்ணா இயக்கியுள்ளார். நிதி அகர்வால் இதில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்திற்குப் பிரபல இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைத்துள்ளார். படம் ஜூன் 12ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளன. தற்போது நான்காவது பாடலும் வெளியிடப்பட்டுள்ளது. ‘தார தார’ என்று தொடங்கும் இப்பாடலை லிப்சிகா பாஷ்யம் மற்றும் ஆதித்யா ஐயங்கார் ஆகியோர் பாடியுள்ளனர். நிதி அகர்வால் நடனமாடிய இந்தப் பாடல் தற்போது இணையத்தில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்து வருகிறது.