2014ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம், ‘குற்றம் கடிதல்’. இந்த படத்தை பிரம்மா இயக்கியிருந்தார். ராதிகா பிரசிதா, மாஸ்டர் விஜய், பாவெல் நவகீதன் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். இப்படத்தை ஜேஎஸ்கே பிலிம் கார்பரேஷன் சார்பில் சதீஷ் குமார் தயாரித்திருந்தார்.
தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தையும் சதீஷ் குமார் தயாரிக்கிறார். மேலும், படத்திற்கு சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் டிகே இசையமைத்துள்ளார். தயாரிப்பாளர் சதீஷ் குமாரே இப்படத்தின் கதையின் நாயகனாக நடிக்க உள்ளார். இதற்கான மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர் சதீஷ் குமார் கூறியதாவது, கொடைக்கானல் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 60 வயது ஆசிரியர் ஓய்வு பெறும் காலத்தில் குடியரசுத் தலைவரிடம் நல்லாசிரியர் விருது பெறும் தருணத்தில், அந்த ஆசிரியரின் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத திருப்பங்களும் சம்பவங்களும் இந்தக் கதையின் மையமாக இருக்கும். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது என்றுள்ளார்.