Touring Talkies
100% Cinema

Friday, October 24, 2025

Touring Talkies

அசுரன் பட நடிகர் கென் கருணாஸ் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்… வெற்றிமாறன், கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2019 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘அசுரன்’ திரைப்படத்தில், நடிகர் தனுஷின் இளைய மகனாக கென் கருணாஸ் நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவர் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அதன் பின்னர் ‘வாத்தி’ மற்றும் ‘விடுதலை 2’ போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துப் பாராட்டைப் பெற்றார். ‘மேதகு’ திரைப்படத்தை இயக்கி கவனம் பெற்ற இயக்குநர் கிட்டு, அடுத்ததாக இயக்கியிருந்த ‘சல்லியர்கள்’ திரைப்படத்திற்கான இசையை கென் கருணாஸ் அமைத்துள்ளார். இதில் அவர் இசையமைப்பாளர் ஈஸ்வருடன் இணைந்து பணியாற்றியிருந்தார். அதன் பின்னர் பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

மேலும், தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகவும் கென் கருணாஸ் பணியாற்றியிருந்த நிலையில் தற்போது அவர் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘காதலன்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய படத்தை அவர் தானே இயக்கியும் நடிக்கவுள்ளார். இப்படத்தை பார்வதா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா தயாரிக்கிறார். தற்போது இப்படம் தற்காலிகமாக ‘புரொடக்‌ஷன் நம்பர் 1’ என அழைக்கப்படுகிறது. மேலும், இதனை ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. பள்ளி பருவ வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இதில் சுராஜ் வெஞ்சரமூடு, திவ்ய தர்ஷினி, ஸ்ரீ தேவி, அனிஷ்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

கென் கருணாஸ் இயக்கும் இப்படத்திற்கான இசையமைப்பை ஜி.வி. பிரகாஷ்குமார் மேற்கொள்கிறார். இதற்கான புரோமோ வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இந்நிலையில், கென் கருணாஸ் இயக்கும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. அந்தப் பூஜை நிகழ்வில், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் கருணாஸுடன், இயக்குநர் வெற்றிமாறன், நடிகர்கள் விஷால், கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.  மேலும், இப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் முழுப் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News