2017ஆம் ஆண்டில் இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடித்த ‘இவன் தந்திரன்’ திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் 2024ஆம் ஆண்டில் ‘இவன் தந்திரன்’ படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்குவதாக இயக்குநர் கண்ணன் அறிவித்தார். இந்தப் பாகத்தில் கதாநாயகனாக வடசென்னை சரண் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று ‘இவன் தந்திரன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை நிகழ்ச்சியுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இப்படத்தின் ஆரம்பக் காட்சிக்காக, இயக்குநர் சுஹாசினி மணிரத்னம் “ஆக்ஷன்”, “கட்” என்று சொல்லி படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
‘இவன் தந்திரன் 2’ படத்தில் கதாநாயகனாக வடசென்னை சரண் நடிக்க, கதாநாயகியாக சிந்து பிரியா நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா, ஜெகன், ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளராக தமன் பணியாற்றுகிறார்.