இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்த திரைப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.
‘தக் லைப்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஜிங்குச்சா’ வெளியாகி, பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த பாடல் யூடியூப் தளத்தில் 2 கோடி பார்வைகளைத் தாண்டியுள்ளது. இந்தப் பாடலை கமல்ஹாசன் எழுதிய வரிகளில், ஆதித்யா, வைஷாலி சமந்த் மற்றும் சக்தி ஸ்ரீ கோபாலன் இணைந்து பாடியுள்ளனர். இப்படத்தின் டிரெய்லரும் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த டிரெய்லர், கமல்ஹாசன் நடித்த 2022ஆம் ஆண்டு வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தின் சாதனையை மிஞ்சியதாகக் கூறப்படுகிறது.
இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மே 24ஆம் தேதி சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற உள்ளதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நேரடி இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையில், இந்த படத்தின் இரண்டாவது பாடலான ‘சுகர் பேபி’ மே 21ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.