Touring Talkies
100% Cinema

Saturday, July 5, 2025

Touring Talkies

சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகராக மட்டுமின்றி தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வரும் சிவகார்த்திகேயன், தனது ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தின் மூலம் ‘வாழ்’, ‘குரங்கு பெடல்’, ‘கொட்டுக்காளி’, ‘கனா’ உள்ளிட்ட படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். தற்போது அவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் ‘மதராஸி’ மற்றும் சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் தயாரிப்பு நிறுவனம் மூலம் இன்னொரு புதிய படம் வெளிவரவுள்ளது. பேண்டஸி ஹாரர் காமெடி வகையில் உருவாகியுள்ள இந்த ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தில் கதாநாயகனாக தர்ஷன் நடித்துள்ளார். அவருடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் காளி வெங்கட் நடித்துள்ளார். மேலும் அர்ஷா, சாந்தினி பைஜூ, வினோதினி, தீனா, அப்துல் லீ மற்றும் மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ராஜவேல் எழுதி இயக்கியுள்ளார். விஜய் பிரகாஷ் தயாரித்துள்ள இப்படத்தை ப்ளே ஸ்மித் மற்றும் சௌத் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இத்திரைப்படத்தைக் கண்டு ரசித்த நடிகரும், தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் படக்குழுவை பாராட்டி வாழ்த்தியுள்ளார். மேலும், இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுக்கொண்டு, தனது ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் மூலமாக உலகளவில் வெளியிட உள்ளார். தற்போது, ‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News