துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் காந்தா. இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் சமுத்திரக்கனி. அவரது நடிப்பு பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

இந்நிலையில் காந்தா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அவர் பேசும்போது ‘தி ராஜா சாப்’ பார்வையாளர்களை வேறொரு மாயாஜால உலகத்துக்கு அழைத்துச் செல்லும். இயக்குனர் மாருதி ஒரு முழுக்க வேறுபட்ட உலகத்தை உருவாக்கியுள்ளார். இந்தப் படம் பிரபாஸை புதுவிதமான அவதாரத்தில் காண்பிக்கும், என்று தெரிவித்தார்.
மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கும் இந்தப் படத்தில் சஞ்சய் தத், போமன் இரானி, ஜரினா வஹாப், சமுத்திரக்கனி, பிரம்மானந்தம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இந்த படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது.

