சுந்தர்.சி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான விஷால், வரலட்சுமி, சந்தானம், நிதின் சத்யா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் ‘மதகஜராஜா’. விஜய் ஆண்டனி இசையமைத்த இந்த படம் கடந்த 12 ஆண்டுகளாக திரைக்கு வராமல் தாமதமாகி இருந்த நிலையில், தற்போது வரவிருக்கும் பொங்கல் திருநாளான ஜனவரி 12-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.
இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷால், மைக்கை பிடித்தபோது அவரது கைகள் நடுங்கியது. மேலும், விஷாலின் தோற்றமும் மிகவும் மாறிப்போனது. இந்த நிலையில், விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதால் இவ்வாறான நிலை ஏற்பட்டது என்று மருத்துவ சான்றிதழை வெளியிட்டுள்ளனர்.
ஆனால், விஷாலின் உடல் நிலைக்கு காரணம் அதிகமான மது பழக்கமே என்கிற செய்திகளும் பரவியுள்ளன. இதற்கிடையில், விஷாலின் மேனேஜர் ஹரி கிருஷ்ணன், “விஷால் தற்போது வைரஸ் காய்ச்சலால் உடல் வலி மற்றும் சோர்வில் இருக்கிறார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்,” என்று தெரிவித்துள்ளார்.சமூக ஊடகங்களில் விஷால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறும் தகவல்கள் முற்றிலும் வதந்தி என்றும், இதைப் பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.