2024ஆம் ஆண்டு நாளையுடன் முடிவடைகிறது. இந்த ஆண்டில் வெளியான படங்கள் குறித்து நாம் ஏற்கனவே பல விஷயங்களை அறிந்திருக்கிறோம். அடுத்துவரும் 2025ஆம் ஆண்டின் படங்களின் குறித்த ஆர்வமும் எதிர்பார்ப்பும் நாம் அனைவரிடமும் உருவாகி உள்ளது.
பொங்கலின் ஆரம்பமே முன்னணி நடிகர்களின் படங்களின் வெளியீடு என்கிறது. 2025ஆம் ஆண்டில் அதிக படங்கள் வெளியாகும் எனும் எதிர்பார்ப்பு உள்ளது. ஆண்டின் முதல் வெள்ளிக்கிழமையான ஜனவரி 3ஆம் தேதியில் சில குறைந்த பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தேதியில் “பயாஸ்கோப், எக்ஸ்ட்ரீம், களன், லாரா” போன்ற படங்கள் வெளியாக உள்ளன. வழக்கம்போல இந்த ஆண்டும் சிறிய பட்ஜெட் படங்களுடன் புதிய வெளியீடுகள் தொடங்குகிறது.பொங்கலுக்கான வெளியீடுகளில் ‘விடாமுயற்சி, வணங்கான்’ போன்ற படங்கள், அதற்குப் பிறகு ஜனவரி 24ஆம் தேதி ‘பாட்டல் ராதா’ மற்றும் ஜனவரி 31ஆம் தேதி ‘அகத்தியா’ போன்ற படங்களும் வெளியாக உள்ளன. மேலும் ‘வீர தீர சூரன், நேசிப்பாயா’ ஆகிய படங்களும் ஜனவரி மாதத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.