Home சினிமா செய்திகள் சினி பைட்ஸ் ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகவுள்ள புதிய சீரியல் தொடரான இதயம் 2 !

ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகவுள்ள புதிய சீரியல் தொடரான இதயம் 2 !

0
28 views

இதயம் -2 என்ற பெயரில் புதிய சீரியல் தொடர்‌ ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ளது. இத்தொடரில் ஜனனி அசோக் குமார் மற்றும் ரிச்சர்ட் ஜோஷ் முன்னணி பாத்திரங்களில் நடிக்கின்றனர்.தனது வசீகரமான தோற்றத்தாலும் ஆழ்ந்த நடிப்புத் திறமையாலும் ரசிகர்களைக் கவர்ந்த ஜனனி அசோக் குமார், இதயம் முதல் பாகத்திலும் நடித்திருந்தார்.இவர்களுடன் சுகன்யா, ஹேமா தயாள், சுதர்சனம், ஆர்த்தி ராம்குமார், சிங்கராஜா, தீபா, சஞ்சய், சித்தார்த் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.தொலைதூர கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண், செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் மீது காதல் கொள்கிறார். ஆனால், தனது இயலாமை மற்றும் சுற்றுப்புற சூழல் காரணமாக அதனை வெளிப்படுத்தற்கு தயங்குகிறார் என்ற உணர்வுப்பூர்வமான தளத்தைக் கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.