மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் ‘தக் லைப்’. கேங்க்ஸ்டர் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. 1987ஆம் ஆண்டு வெளியான ‘நாயகன்’ திரைப்படத்திற்குப் பிறகு, மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் மீண்டும் இணைந்திருக்கும் இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் சிம்பு, திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இசையமைப்பாளராக ஏ.ஆர். ரகுமான் பணியாற்றியுள்ளார்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளுக்காக ‘தக் லைப்’ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கும் வகையில், மொத்தம் 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது. அதிகாலை முதலே திரையரங்குகளுக்கு திரண்டு வந்த ரசிகர்கள், பட்டாசு வெடித்து, ஆட்டம் பாட்டம் நடைபெறும் வகையில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.