Tuesday, January 7, 2025

கேம் சேன்ஜர் படத்திற்க்கு ரசிகர்கள் கொடுக்கும் பணம் இதற்கே சரியாக போகும் – எஸ்.சூர்யா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ராம்சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள “கேம் சேஞ்சர்” திரைப்படம் வரும் 10ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சர்வதேச அளவில் வெளியீடாக உள்ளது. இதனை தொடர்ந்து, படக்குழுவினர் பல்வேறு விளம்பர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், படம் வெளியாக இன்னும் இரண்டு தினங்கள் மட்டுமே உள்ளதால், இந்த பிரமோஷன்கள் அதிகமடைந்துள்ளன.

படத்தின் மெயின் வில்லன் கதாபாத்திரத்தில் அரசியல்வாதியாக நடித்துள்ள எஸ்ஜே சூர்யா, படம் குறித்த பல தகவல்களை பகிர்ந்து வருகிறார். ராம்சரணின் கதாபாத்திரத்திற்கு எதிராக அவர் காட்டும் கோபம் மற்றும் ஆக்ரோஷம் படம் வெளியாகும் முன்பே ட்ரெயிலரில் ரசிகர்களை ஈர்க்க வைத்துள்ளது. படத்தின் வெற்றி எஸ்ஜே சூர்யாவின் கேரக்டரின் தாக்கத்தால் அமையும் என்று படக்குழுவினர் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்.

மேலும், இந்த படத்திற்காக தயாரிப்பாளர்கள் மொத்தம் 500 கோடி ரூபாய் செலவழித்துள்ளனர் என்று எஸ்ஜே சூர்யா தெரிவித்தார். அதற்கான வட்டியை கணக்கிட்டால் அது மிகப்பெரிய அளவுக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டார். தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குநர் ஷங்கரின் பிரம்மாண்ட எண்ணங்களுக்கு முழு ஆதரவு வழங்கியதாகவும், இப்படத்திற்கான சிறந்த சப்போர்ட் அவர் தர்ந்ததாகவும் எஸ்ஜே சூர்யா கூறினார்.

இதில் இடம்பெற்றுள்ள “ஜருகண்டி” பாடல் ஏற்கனவே படக்குழுவால் லிரிக் வீடியோவாக வெளியிடப்பட்டது. அந்த பாடல் சமூக வலைதளங்களில் லீக்காகியதை அறிந்தபின், பாடலை வெளியிட்டதாகவும், தற்போது தான் அந்த பாடலை பார்த்ததாகவும் எஸ்ஜே சூர்யா தெரிவித்தார். மேலும், “ரசிகர்கள் செலுத்தும் பணம், அந்த பாடலுக்கே சரியாக செலவாகும்” என்றும் கூறினார். பிரபுதேவா மாஸ்டர் கொரியோகிராபி செய்துள்ள இந்த பாடல், மேலும் அழகிய மெருகு பெற்றுள்ளதாகவும் அவர் புகழ்ந்து கூறினார்.

- Advertisement -

Read more

Local News