Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

ஏமாற்றிய மாப்பிள்ளை வீட்டார்… உடனடியாக திருமணத்தை நிறுத்திய நடிகை ஜெனி பிரியா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சின்னத்திரை நடிகை ஜெனிப்ரியா, வாணி ராணி சீரியல் மூலம் அறிமுகமாகி, மேலும் சில தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சொந்தமாக ப்யூட்டி பார்லர் நடத்தி வரும் ஜெனிப்ரியா, சில வாரங்களுக்கு முன்பு சிங்கப்பூரைச் சேர்ந்த விமானி துநேசன் என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் விரைவில் நடைபெறவிருந்த நிலையில், மாப்பிள்ளை வீட்டார் இப்போது 100 சவரன் நகை வேண்டும் எனக் கேட்டதற்கு, ஜெனிப்ரியா முதற்கட்டமாக 50 சவரன் நகையை மட்டும் வழங்கினார். இதைத் தொடர்ந்து, மாப்பிள்ளை வீட்டார் ஜெனிப்ரியாவை சிங்கப்பூர் அழைத்து சென்றபோது, அவர்களின் சில நடத்தை மாற்றங்களைக் கவனித்த ஜெனிப்ரியா, திருமணத்தை ரத்து செய்யும் முடிவுக்கு வந்தார்.

அப்போது, அவர் கொடுத்த பொருட்களை மாப்பிள்ளை வீட்டார் திருப்பி வழங்கியபோதும், 50 சவரன் நகை பற்றி கேட்கும் போது எதுவும் தங்கள் வசம் இல்லை என மறுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஜெனிப்ரியா, துநேசன் மற்றும் அவரது குடும்பத்தாரின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறார் என்ற செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News