வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘விடுதலை 2’. இப்படம் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் முதல் பாடலான ‘தினம் தினமும்…’ சிறிது நேரத்திற்கு முன்பு வெளியானது. இளையராஜா எழுதிய இந்த பாடலை, அவர் அனன்யா பட்டுடன் இணைந்து பாடியுள்ளார். விஜய் சேதுபதி மற்றும் மஞ்சு வாரியருக்கு இடையேயான காதல் பாடலாக இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கான புகைப்படங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன.
இளையராஜாவின் உணர்வூட்டும் குரல், தெளிவான சொல் உச்சரிப்பு, அனன்யா பட்டின் மழலையான குரல் ஆகியவை ‘தினம் தினமும் உன் நினைப்பு வளைக்கிறதே, என்னைத் துளைக்கிறதே’ போன்ற வரிகளை மிகவும் இனிமையாக ஒலிக்கச் செய்கின்றன. இப்பாடல் யூடியூபில் வெளியாகியவுடன் அதன் கமெண்ட்டுகள் பாடலின் பிரபலத்தைக் காட்டுகின்றன.‘விடுதலை’ முதல் பாகத்தில் இடம்பெற்ற ‘வழி நெடுக காட்டுமல்லி’ பாடலின் சாயல் இதிலும் காணப்படுகிறதாயினும், இது ஒரே சொற்களிலேயே நம் மனதை வசீகரிக்கிறது.