இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பராசக்தி. இப்படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . ஸ்ரீலீலாவிற்கு இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது ஜிவிக்கு 100வது படமும், சிவகார்த்திகேயனுக்கு 25வது படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து கடைசிக் கட்ட பணிகள் நடக்கின்றன. இப்படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தற்போது பராசக்தி படத்தின் முதல் பாடலான ‘அடி அலையே’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏகாதசி பாடல் வரிகளை எழுத, ஷான் ரோல்டன், தீ ஆகியோர் இணைந்து இப்பாடலை பாடியுள்ளார்கள். தற்போது இந்தப்பாடல் வைரலாகி வருகிறது.

