நடிகர் சூர்யாவின் 44-வது திரைப்படமான ‘ரெட்ரோ’ படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்திற்காக சூர்யாவின் 2D நிறுவனம் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ‘ரெட்ரோ’ திரைப்படம் பீரியாடிக் கேங்ஸ்டர் கதையும் காதல் பின்னணியும் இணைந்த ஒரு வித்தியாசமான கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000156122-1024x576.jpg)
இதில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். அதோடு, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் சுஜித் ஷங்கர் ஆகிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000157530-683x1024.jpg)
சமீபத்தில், படக்குழுவினரால் ‘சூர்யா 44’ படத்தின் தலைப்பு டீசர் வெளியிடப்பட்டது, இது இணையத்தில் வைரலாக பரவியது. ஆக்சன் மற்றும் காதல் கலந்து உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் வரும் மே 1-ஆம் தேதி, தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி, ‘ரெட்ரோ’ படத்தின் முதல் பாடலான ‘கண்ணாடி பூவே’ வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.