சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதற்கான இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

அந்த விழாவில் பேசிய ருக்மிணி வசந்த், மதராஸி எல்லோருக்கும் ஒரு சிறப்பு திரைப்படமாக இருக்கும். எனக்கு மிகவும் நெருக்கமான படமாக இது உள்ளது. என்னை நம்பி இந்த கதாபாத்திரத்தை கொடுத்த முருகதாஸ் சார் அவர்களுக்கு நன்றி.
சினிமாவுக்கு அவர் தொடர்ந்து காட்டும் உழைப்பே ஆச்சரியமாக இருக்கிறது. நான் எஸ்.கே-வின் certified பேன் கேர்ள்! தமிழ் ரசிகர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது தொடக்கத்திலேயே இவ்வளவு அன்பை தந்துள்ளீர்கள் என்பதில் பெருமை அடைகிறேன்” என்று கூறினார்.