புதிய முகங்கள் இணைந்து உருவாக்கியுள்ள படம் ‘சாட்சி பெருமாள்’. ஆர்.பி.வினு இயக்கத்தில், மதன் கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார், மஸ்தான் இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் அசோக் ரங்கராஜன், வி.பி.ராஜசேகர், பாண்டியம்மாள், எம்.ஆர்.கே., வீரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இயக்குனர் வினு கூறியதாவது: “பத்திரப்பதிவு அலுவலகங்களில் சாட்சி கையெழுத்து போடுபவர்கள் எப்போதும் கண்டிருக்கிறேன். இது அவர்களின் தொழில். ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றுடன் அங்கேயே இருப்பார்கள். இந்தக் கதையின் மையம் அவர்களில் ஒருவரைச் சுற்றியே. பொதுவாக சாட்சி கையெழுத்து போடுபவர்களுக்கு பெரிய சிக்கல்கள் ஏற்படாது. ஆனால் அரிதாக சிலர் பெரிய பிரச்னைகளில் சிக்குவார்கள். இப்படியொரு சிக்கலில் மாட்டிக் கொள்கிற ஒருவரின் கதையைத் தான் இந்தப் படம் சொல்லுகிறது. அவருக்கு ஏற்பட்ட பிரச்னையை அவர் எவ்வாறு தீர்க்கிறார் என்பதே கதை. என் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இந்தக் கதையை உருவாக்கினேன்.
பெரியகுளம் மற்றும் அகமலையில் படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்த யதார்த்தமான படம் திரைப்பட விழாக்களுக்காகவே உருவாக்கப்பட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த திரைப்பட விழாக்களில் பங்கேற்று இதுவரை 12 விருதுகளை வென்றுள்ளது. மேலும் சில விழாக்களுக்கு அனுப்பும் திட்டமுள்ளது. இப்படம் விரைவில் ஓடிடி-யில் வெளியாக இருக்கிறது,” என்றார்.