Touring Talkies
100% Cinema

Thursday, July 24, 2025

Touring Talkies

இப்படத்தில் அதிக ரொமாண்டிக் காட்சிகள் உள்ளன…’மெகா 157′ குறித்து அப்டேட் கொடுத்த இயக்குனர் அனில் ரவிபுடி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு மொழி திரைப்படங்களில் சிரஞ்சீவியுடன் ‛சைரா நரசிம்ம ரெட்டி’ மற்றும் ‛காட்பாதர்’ ஆகிய படங்களில் நடித்த நயன்தாரா, தற்போது அவரது 157வது திரைப்படத்திலும் சிரஞ்சீவியுடன் இணைந்துள்ளார். இந்த திரைப்படத்தை அனில் ரவிபுடி இயக்கி வருகிறார். இதில் சிரஞ்சீவியும் நயன்தாராவும் திருமணமான தம்பதிகளாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படத்தின் ஆரம்ப கட்ட படப்பிடிப்பு முசோரியில் நடைபெற்றது. தற்போதைய கட்டத்தில், கேரளாவில் ஒரு காதல் பாடல் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த படம் ஒரு குடும்ப கதையை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. மேலும், இதில் மற்றொரு நாயகியாக கேத்ரின் தெரசா நடித்து வருகிறார். இந்த படத்தை 2026 ஆம் ஆண்டு சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

அத்துடன், சிரஞ்சீவியும் நயன்தாராவும் இப்படத்தில் திருமணமான தம்பதிகளாக நடித்தாலும், அவர்கள் இடையே அதிக அளவில் ரொமான்டிக் காட்சிகள் இடம்பெற உள்ளதாகவும், அவர்கள் காதலித்த காலத்தை நினைவுகூரும் இளமை நிறைந்த காட்சிகளும் படத்தில் இடம்பெறும் எனவும் இயக்குனர் அனில் ரவிபுடி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News