Saturday, February 1, 2025

சவதீகா ரீலொடெட் வெர்ஷனை வெளியிட்ட ரசிகர்களை மேலும் VIBE ஆக்கிய விடாமுயற்சி படக்குழு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் “விடாமுயற்சி”. இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் வரும் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

“விடாமுயற்சி” படத்தின் “சவதீகா” பாடலும் டிரெய்லரும் சமீபத்தில் வெளியானது, இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, “விடாமுயற்சி” திரைப்படத்தின் பி.டி.எஸ். (Behind The Scenes) வீடியோவையும் படக்குழு நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில முக்கிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதேசமயம், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனுடன், “விடாமுயற்சி” திரைப்படத்திற்கு யு/ஏ (U/A) சான்றிதழை தணிக்கைக் குழு வழங்கியுள்ளதாக படக்குழு நேற்று வெளியிட்ட போஸ்டரில் அறிவித்துள்ளது.
மேலும், “சவதீகா” பாடலின் ரீலோடெட் வெர்சனை (Reloaded Version) படக்குழு வெளியிட்டுள்ளது, இது ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News