சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார்.
இந்தப் படம் லோகேஷ் கனகராஜ் சினிமாடிக் யுனிவர்ஸில் சேருமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில், சூப்பர் ஸ்டாரின் அடுத்த திரைப்படமான ‘ஜெயிலர் 2’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதற்கு மத்தியில், ‘கூலி’ திரைப்பட ப்ரோமோவில் நடித்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அல்ல; அவருக்கு பதிலாக வேறு ஒருவரை டூப் போட்டு நடிக்க வைத்துள்ளனர் என சில விமர்சகர்கள் குற்றம்சாட்டினர். இதற்கு பதிலடி அளிக்கும் வகையில், ப்ரோமோ மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள்.