தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ திரைப்படம், ஏப்ரல் 10ஆம் தேதி வெளியிடப்படும் என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், சில நாட்களுக்கு முன்னர், புதிய வெளியீட்டு தேதியை அவர்கள் அறிவித்துள்ளனர். அதன்படி, படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த நீட்டிப்பால், இதுவரை வெளியான சில சர்ச்சைகள் உண்மையாக இருக்கக்கூடுமோ என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக, கால்ஷீட் குழப்பங்களால் படப்பிடிப்பு தாமதமாகி, படம் நேரத்தில் முடிவடையாததுதான் காரணம் என்கின்றனர்.
அக்டோபர் 1ம் தேதி புதன்கிழமை என்பதோடு, அன்று ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய இரண்டும் ஒரே நாளில் வருகின்றன. அதற்குப் பிறகு வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறை நாளாகும். இந்த காரணங்களால், அந்த வார இறுதியில் படத்தை வெளியிட தயாரிப்பு குழு திட்டமிட்டுள்ளது.