Touring Talkies
100% Cinema

Wednesday, May 21, 2025

Touring Talkies

தக் லைஃப் பட ப்ரோமோஷன்காக மும்பைக்கு பறந்த படக்குழு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாக்கியுள்ள திரைப்படம் ‘தக் லைப்’. இந்தப் படத்தில் நடிகர்கள் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை அமைப்பாளராக ஏ.ஆர். ரகுமான் பணியாற்றியுள்ளார். இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ‘தக் லைப்’ திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

இத்திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஜிங்குச்சா’ சமீபத்தில் வெளியிடப்பட்டது, மற்றும் இப்பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. யூடியூப்பில் ‘ஜிங்குச்சா’ பாடல் 2 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இந்தப் பாடலை, கமல்ஹாசன் எழுதிய வரிகளுக்கு ஆதித்யா, வைஷாலி சமந்த் மற்றும் சக்தி ஸ்ரீ கோபாலன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

இதற்கிடையில், ‘தக் லைப்’ படத்தின் இந்தி டிரெய்லர் வெளியீடு மற்றும் ப்ரோமோஷனுக்காக கமல்ஹாசன், சிம்பு, திரிஷா மற்றும் படக்குழுவினர் மும்பைக்கு பயணித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News