Thursday, October 31, 2024

ரஜினிகாந்துடன் கருப்புநிற உடையில் மாஸான போஸ் உடன் தீபாவளி வாழ்த்துக்கள் சொன்ன ‘கூலி’ படக்குழு! #Coolie

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய்யின் ‘லியோ’ படத்திற்குப் பின்னர் ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ரஜினியுடன், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

‘கூலி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. தற்போது, சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில், ஓய்வுக்கு பின் ரஜினிகாந்த் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ‘கூலி’ படக்குழு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

‘கூலி’ படக்குழு படப்பிடிப்பு தளத்தில் இருந்து படக்குழுவினர் ரஜினிகாந்த்துடன் அனைவரும் கருப்பு உடை அணிந்தவாரு எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News