Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

தனது திருமண நாளையொட்டி பிக்பாஸ் பிரபலம் ராஜூ பகிர்ந்த புகைப்படங்கள்… குவிந்த வாழ்த்துக்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல சின்னத்திரை நட்சத்திரமாக அறியப்பட்ட ராஜு பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொண்டார். அந்த சீசன் மிகவும் சுவாரசியமானதாக இருந்தது, மேலும் அவரது அமைதி மற்றும் நகைச்சுவை திறன் மக்களை கவர்ந்ததால் பிக் பாஸ் டைட்டில் வென்றார். பின்னர், விஜய் டிவியில் “ராஜு வூட்ல பார்ட்டி” எனும் நகைச்சுவை ரியாலிட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அதன் பின் துணை முதல்வர், மனிதன், நட்புன்னா என்னன்னு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ், டான் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, டான் படத்தில் எதிர் கதாநாயகனாக நடித்ததால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். தற்போது ராஜு “பன் பட்டர் ஜாம்” எனும் படத்தில் நடித்து வருகிறார். Rain of Arrows Entertainemt நிறுவனம் தயாரிக்க, “காலங்களில் அவள் வசந்தம்” படத்தின் மூலம் அறிமுகமான ராகவ் மிர்தாத் இயக்குகிறார். இதில் ராஜு ஜோடியாக பவ்யா திரிகா நடித்துள்ளார்.

இந்த நேரத்தில், ராஜு தனது மனைவி தாரிகாவுடன் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அவர் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அவரது திருமண நாளான நேற்று அவரது மனைவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி லைக்குகளை அள்ளி வருகின்றன.

- Advertisement -

Read more

Local News